சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், கடந்த ஜூன் 28-ம் தேதி நகை காணாமல் போன வழக்கில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியபோது அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று காவலர்கள் 5 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.இதில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருடிய குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால் தனிப்படை காவலர்கள் 5 பேர் உயிர் போகும் என தெரிந்தே அடித்ததாக எப்.ஐ.ஆரில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டபோது வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் இறந்ததாக காவல்துறை தெரிவித்தது.