சென்னை, வேளச்சேரி நேருநகர், ஏ.எல்.முதலியார் தெருவில் நடந்து வந்த இளைஞர் ஒருவரை இரண்டு பேர் பட்டாக் கத்தியால் சரமாறியாக வெட்டினர்.
வெட்டுப்பட்டவர் எழுந்துக்க முடியாமல் படுத்தவாறே தனது கைகளால் தற்காத்துக் கொள்ள முயற்சித்தும் தொடர்ந்து பலமுறை வெட்டிக் கொண்டே இருந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் கற்களை வீசியும் காலணியையும் வீசியும் அந்த இளைஞரை காப்பாற்றினர்.
பின்னர் பொதுமக்கள் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வேளச்சேரி போலீஸார் வெட்டுப்பட்டு படுகாயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட தகவலில், வெட்டுப்பட்ட இளைஞர் பார்த்திபன் என்பதும், இருவரும் போதையில் வெட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யார் வெட்டியது, எதற்காக வெட்டியது என காவல்துறை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாலையில் இளைஞரை வெட்டியபின் இளைஞரை வெட்டிய பட்டாகத்தியுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்கள் பரவி வருகிறது
