தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : “அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முன்னேறியதா?. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதை சொல்வதற்கு முன்னால் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும் அல்லது சொல்லும்போது கொஞ்சம் வெட்கப்பட்டாவது இருக்க வேண்டும். வர்களுடைய 10 ஆண்டுகால ஆட்சி என்பது தமிழ்நாட்டினுடைய ஒரு இருண்டகால ஆட்சி என்றே எடுத்துக்கொள்ளலாம்.
மாநகர மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கு எடப்பாடியின் நிர்வாகத்திறமை மிக நன்றாக தெரியும். இன்றைக்கு தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முன்னிலையில் இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முழு காரணம் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிகாலத்தில் அவர் கொண்டுவந்த திட்டங்கள் தான். இதை மறைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் எத்தனை ஜமக்காலங்களை கொண்டு வந்தாலும் இதை மூட முடியாது.
தொடர்ந்து, இந்தி திணிப்பை கொண்டுவந்த காங்கிரஸோடு முதலில் கூட்டணி வைத்ததே திமுகதான் எனவும், திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் இபிஎஸ் கூறியது பற்றிய கேள்விக்கு, “ எடப்பாடி பழனிசாமிக்கு இந்தி எது, இங்கிலீஷ் எது, தமிழ் எதுவென்றே தெரியாது. கம்பராமாயணத்தையே சேக்கிழார் எழுதினார் சொன்னார். அவரை பற்றியெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்” என்றார்