சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தானுக்கும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, சென்னைக்கும் பணியிட மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.
இதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா என்று பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் இன்று மாலை ஸ்ரீவஸ்தவா தலைமை நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஸ்ரீவஸ்தவாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.