UPI பயன்பாடு குறைவு.. ரொக்கப் பணத்தை நாடும் மக்கள்?

இந்தியாவில் யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பொதுமக்களிடம் உள்ள ரொக்கப் பணப்புழக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

2026ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி, மக்களிடம் புழக்கத்தில் உள்ள ரொக்கப் பணத்தின் மதிப்பு ரூ.41.8 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 13 சதவீதம் அதிகமாகும்.

அதே நேரத்தில், யுபிஐ பயன்பாட்டின் வளர்ச்சி 17 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வளர்ச்சி சற்று மந்தமடைந்தாலும், ரொக்கப் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் மக்கள் ரொக்கப் பணத்தை பாதுகாப்பானதாகவும், அவசர தேவைகளுக்கு அவசியமானதாகவும் கருதுகின்றனர்.

சர்வர் கோளாறு, மின்தடை உள்ளிட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்படும் நேரங்களிலும் ரொக்கம் கைகொடுப்பதால், மக்கள் குறிப்பிட்ட தொகையை எப்போதும் கையில் வைத்திருக்கின்றனர்.

தற்போது பொதுமக்களுக்கு யுபிஐ பரிவர்த்தனைகளில் கட்டணம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் பெரிய வணிகர்களின் அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்கு MDR போன்ற கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதுவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து சிலரிடம் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் முழுமையாக டிஜிட்டலாக மாறாமல், யுபிஐ மற்றும் ரொக்கம் ஆகிய இரு முறைகளையும் இணைத்து பயணிப்பது தெளிவாகிறது.

Related News

Latest News