ஃபிக்சட் டெபாசிட் அடிப்படையிலான கிரெடிட் கார்டு, குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கான நவீன நிதி கருவியாக இருக்கிறது. இதனை பெற அதிக கிரெடிட் ஸ்கோர் தேவையில்லை, ஏனெனில் பயனர் ஏற்கனவே வங்கிக்கு ஒரு ஃபிக்சட் டெபாசிட் மூலம் பாதுகாப்பை வழங்கியிருக்கிறார்.
இந்த கார்டின் செயல்முறை எளிமையானது. நீங்கள் உருவாக்கிய ஃபிக்சட் டெபாசிட் தொகையை பிணையாக வைத்து, அதன் 70% முதல் 90% வரை கிரெடிட் லிமிட் வழங்கப்படும். முக்கியமாக, ஃபிக்சட் டெபாசிட் தொகை தொடர்ச்சியாக வட்டி வருமானத்தை ஈட்டிக் கொண்டு இருக்கும்.
கார்டைப் பயன்படுத்தும் போது, செலவினத்தை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது அவசியம். தவறியால் வங்கி ஃபிக்சட் டெபாசிட்-இல் இருந்து நிலுவைத் தொகையைக் கழிக்கும்.
இந்த Card-க்கு பல நன்மைகள் உள்ளன. முதலாவது, ஃபிக்சட் டெபாசிட் பிணையாக இருப்பதால் ஒப்புதல் எளிதாக பெறப்படுகிறது. இரண்டாவது, பாதுகாப்பான கடன் என்பதால் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். மூன்றாவது, சரியான முறையில் பயன்படுத்துவதால் கிரெடிட் வரலாறு உருவாகி எதிர்கால பெரிய கடன்களுக்கு உதவும்.
மேலும், ஃபிக்சட் டெபாசிட் தொடர்ந்தும் வட்டி வருமானத்தை வழங்கும். வழக்கமான கிரெடிட் கார்டுகளில் கிடைக்கும் கேஷ்பேக், ரிவார்டு பாயிண்டுகள், தள்ளுபடிகள் போன்ற அனைத்து சலுகைகளும் இந்த கார்டிலும் பெறலாம்.
புதிதாக வேலை செய்யும் நபர்கள், மாணவர்கள், சுயதொழில் செய்பவர்கள், குறைந்த கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்கள் அனைவரும் இந்த கார்டைப் பெறலாம். ரூ.5,000 முதல் 20,000 வரை குறைந்த ஃபிக்சட் டெபாசிட் தொகையிலும் கார்டு கிடைக்கும்.
ஃபிக்சட் டெபாசிட் பாதுகாப்பும், கிரெடிட் கார்டின் நெகிழ்வுத்தன்மையும் ஒரே நேரத்தில் பெற விரும்பினால், இது சிறந்த வாய்ப்பு. இருப்பினும், நிதி முடிவுகளை எடுப்பதற்கு முன் நிதி ஆலோசகரின் ஆலோசனை அவசியம்.