Tuesday, September 9, 2025

500 கிராம் எடையை குறைத்தால் ரூ.6,100 கிடைக்கும் : எங்கே தெரியுமா?

உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என சீனாவில் Arashi Vision Inc என்ற நிறுவனத்தின் அறிவிப்பு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கியுள்ளது. இந்த சவாலில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.

இந்த நிறுவனம் உடல் எடையை குறைக்கும் சவாலை கடந்த 2022ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும், 99 ஊழியர்கள் மொத்தமாக 950 கிலோ எடையை குறைத்து ரூ.1.23 கோடியை பிரித்துக் கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News