சங்கரன்கோவில்-நெல்லை சாலையில் நேற்றிரவு வந்துக்கொண்டிருந்த ஒரு லாரி, அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனத்தின் மீது உரசியது. இது குறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார், லாரியை பிடிக்க இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றனர். ஆனால், ஓட்டுநர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றுள்ளார்.
பின்னர் மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு மீண்டும் நிற்காமல் சென்று. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கந்தசாமி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்துவிட்டு அதிவேகமாக சென்ற லாரி மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதையடுத்து ஓட்டுநர் மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.