பிஎஸ்என்எல் நிறுவனம் 72 நாள் செல்லுபடியாகும் தன்மை, 2 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிஎஸ்என்எல் புதிய ₹485 ப்ரீபெய்ட் சலுகை
- வரம்பற்ற கால் சேவை
- தினசரி 2 ஜிபி அதிவேக டேட்டா
- தினசரி 100 எஸ்எம்எஸ்
- 2 ஜிபி கழித்த பிறகு வேகம் 40 Kbps ஆக குறையும்
இந்த திட்டம் பொதுவாக 72 நாட்கள் செல்லுபடியாகும். தனியார் நிறுவனங்களில் ₹700க்கும் மேலாக இருக்கும் நிலையில், இது குறைந்த விலையில் தருகிறது.
பிஎஸ்என்எல் தற்போது நாட்டில் சுமார் 98,000 4G தளங்களை இயக்கி வருகிறது. மேலும், கூடிய விரைவில் 5G நெட்வொர்க் தொடங்க தயாராக உள்ளது.
பயனர்கள் தங்கள் BSNL சிம்களைக் BSNL ஸெல்ஃப்-கேர் ஆப், BSNL அதிகாரப்பூர்வ வலைத்தளம், PhonePe, Google Pay மற்றும் CRED போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளிலும் ரீசார்ஜ் செய்யலாம்.
