Tuesday, July 15, 2025

டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்

மாநகரம், கைதி, விக்ரம் என தொடர்ச்சியாக வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கினார். இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இதையடுத்து ரஜினிகாந்தை வைத்து ‘கூலி’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கூலி படத்திற்காக இயக்குனர் லோகேஷ் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி லோகேஷ் கனகராஜ் ரூ.50 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. லியோ படத்தை விட கூலி படத்திற்கு வாங்கிய சம்பளம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news