Friday, January 3, 2025

‘விக்ரம்’ படத்திலேயே ‘லியோ’ இருக்காரு! மிரள வைக்கும் LCU

விஜயின் 67வது படத்தை லோகேஷ் இயக்குவது தெரிந்ததில் இருந்தே, ரசிகர்களால் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி  இந்த படம் LCUவின் கீழ் வருகிறதா இல்லையா என்பது தான்.

அதற்கான அதிகாரப்பூர்வ பதில் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும் LCUவில் தொடரும் படமாகவே லியோ அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வைரலாகும் அந்த பக்கத்தில், செம்பன் வினோத் நடித்த ஜோஸ் கதாபாத்திரம் அமர் குறித்து பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. அதில், காஷ்மீருக்கு கேஸ் விஷயமாக சென்ற போது ஏற்பட்ட பழக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது லியோ பட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருவதால், இதைத் தொடர்புபடுத்தி லியோ LCUவின் கீழ் தான் வரும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். கைதியில் நடித்த ஜார்ஜ் மரியான் படப்பூஜைக்கு வந்தது மற்றும் விக்ரம் படத்தின் ஏஜென்ட் டீனாவான வசந்தி லியோ ஷூட்டிங்கிற்கு சென்றிருப்பது இந்த யூகங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

Latest news