Thursday, July 31, 2025

கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்! கண்சிவந்த இஸ்ரேல் பிரதமர்! உலகப்போர் மூளும் அபாயம்?

ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் என்று கருதப்பட்ட இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனையடுத்து ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒரு மணி நேரத்தில் 20 ஈரான் ட்ரான்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. கடந்த வெள்ளிக் கிழமையன்று, ஈரானின் அணுசக்தி மையங்கள், ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் ராணுவ தளபதி உள்ளிட்ட முக்கிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது அலையலையாக ட்ரோன்களை வீசி பதில் தாக்குதல் நடத்தியது. அடுத்தடுத்து, இரு நாடுகளும் விடாப்பிடியாக தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் உச்சகட்டத்தையடைந்து உலகப்போராக மாறும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இரு நாடுகளும் மாறி மாறி ஒருவருக்கொருவர் எச்சரிக்கை விடுத்த நிலையில், நள்ளிரவில் ஈரான் நடத்திய தாக்குதலில், இஸ்ரேலை சேர்ந்த குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

நேற்று மாலை மீண்டும் இஸ்ரேலை ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்கியுள்ளதால் இது இப்போதைக்கு முடிவுக்கு வராது என்ற பதற்றத்தையே உலகம் முழுவதும் எற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News