இந்த காலத்தில், அனைவரிடமும் செல்போன் உள்ளது. இதனால் ஹெட் ஃபோன்கள் மற்றும் இயர்போன்களைப் பயன்படுத்துவது தற்போது வழக்கமாகிவிட்டது. பயணங்களில் தங்களுக்கு பிடித்த பாடல்கள் கேட்கவும், திரைப்படங்களையும் வீடியோக்களையும் பார்ப்பதற்கும் ஹெட் ஃபோன்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
சில நேரங்களில் மக்கள் ஒருபக்கம் இயர்போன் பழுதடைந்த பிறகும் மற்றொரு பக்கத்திலேயே வைத்துக்கொண்டு இசை கேட்கிறார்கள். இது ஆபத்தானது. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி ஒரு காதில் மட்டும் தொடர்ந்து இசையைக் கேட்பது தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், ஒலி அளவு அதிகமாக இருந்தால், அது காதை அழுத்தும். இத காதில் ஒலி அழுத்தத்தை அதிகரித்து கேட்கும் திறனை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
மற்றொரு காதில் எதுவும் ஒலி பெறாததால், மூளை ஒலியின் தோற்றத்தை சரியாக உணர முடியாது. இதனால் ஒலி எது எங்கிருந்து வருகிறது என்று கண்டுப்பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஒரு காதில் நீண்ட நேரம் முயற்சி செய்வது அந்தக் காதுக்கு சோர்வையும் அசௌகரியத்தையும் உண்டாக்கும்.
இந்த பிரச்சனைகளை தவிர்க்க ஒலி அளவை மிதமாக வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் பாடல்கள் கேட்கப்போகும்போது இரு காதுகளிலும் இயர்போன்களை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 முதல் 10 நிமிடங்கள் இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவற்றை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் இசையை ரசிக்கலாம் மற்றும் உங்கள் கேட்கும் திறனையும் பாதுகாக்கலாம்.