குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டம் கோவயா கிராமத்தை சேர்ந்தவர் ரம்பை லக்னோத்ரா. கடந்த புதன் கிழமை இரவு இவரது வீட்டின் சமையல் அறைக்குள் சிங்கம் நுழைந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்த சிங்கத்தை விரட்ட முயற்சித்தனர். மக்களின் சுமார் 2 மணிநேர முயற்சிக்குப்பின் சிங்கம் வீட்டில் இருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றது.