தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரையில் அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள் என்றார்.
பா.ஜ.க.வை விமர்சித்து தி.மு.க. சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற முயற்சி செய்கிறது என்றும் கூறினார். மேலும், இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். சசிகலா மற்றும் ராமதாஸ் கூட்டணி எங்களுக்கு பாதிப்பில்லை என்றும் தெரிவித்தார்.
நடிகர் விஜயகாந்த் போன்று விஜய் அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்; அவரது வருகை தி.மு.க.க்கு பாதிப்பாக இருக்கும் என்றார். அத்துடன், அண்ணாமலை போட்டியிடாதது குறித்து வரும் தகவல்கள் வதந்திகள் மட்டுமே; எந்த அழுத்தமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
