விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
விருதுநகரில் உள்ள நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகளில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கிறார்கள். ஆனால், சில ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படாமல், தொடர்ந்து வெடிவிபத்து சம்பவங்கள் நிகழ்கின்றன.
வெடிவிபத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு பயிற்சி வகுப்புகளில் பல பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், விருதுநகரில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.