Sunday, December 28, 2025

சட்டமன்ற பேரவையை முற்றுகைடுவோம் – ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுனர் சங்கம் அறிவிப்பு

கடந்த 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக அரசு உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் ஜாகிர் உசேன், ஊபர், ஓலா நிறுவனங்களோடு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி ஊபர், ஒலா நிறுவனங்கள் கால் டாக்ஸி ஓட்டுநர்களிடம் 25% வரை கமிஷன் மற்றும் 5% GST வசூலிப்பதை கைவிட வேண்டும் என்று கூறினார்.

போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்த அரசு உருவாக்கியுள்ள ஆட்டோ, கால் டாக்ஸிகளுக்கான செயலியை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், RTO இடைத்தரகர்களை வைத்து லஞ்சம், ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வரும் 24 தேதி போக்குவரத்து துறை மானிய கோரிக்கையின் போது சட்டமன்ற பேரவையை முற்றுகைடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Related News

Latest News