தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில், எலுமிச்சை விற்பனை சூடுபிடித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரவுக்கு ஏற்ப விலை இருப்பதாக கூறியுள்ளனர். நோய்கள் தாக்கம் இல்லாமல் எலுமிச்சை விளைந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு கிலோ எலுமிச்சை 70 ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில், வரும் நாட்களில் விலை உயரும் என கூறப்படுகிறது.