தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் எலுமிச்சை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரத்து அதிகரிப்பு காரணமாக எலுமிச்சையின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.140 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.35 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்னர்.