அதிமுக ஆட்சிக்கு வந்ததும் புளியங்குடியில் எலுமிச்சை ஜூஸ் ஆலை மற்றும் குளிர்சாதன கிடங்கு அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
தென்காசியில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புளியங்குடியில் எலுமிச்சை விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, தங்கள் பகுதியில் எலுமிச்சை ஜூஸ் ஆலை மற்றும் குளிர்சாதன கிடங்கு அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்படும் என உறுதியளித்தார். முன்னதாக, எடப்பாடி பழனிசாமிக்கு எலுமிச்சை பழம் கொடுத்து விவசாயிகள் வரவேற்றனர்.