பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களை நாடு திரும்பவும், இங்குள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை, டில்லி அரசாங்கம் அமல்படுத்தி இருக்கிறது.