‘உடனடியாக வெளியேறுங்கள்!’ சிதறும் ஈரான் தலைநகர்! துளைத்து தாக்கும் இஸ்ரேல் ஏவுகணைகள்!

இஸ்ரேல் 50க்கும் மேற்பட்ட ஜெட் விமானங்கள் மூலம் ஈரானின் முக்கிய இராணுவ தளங்கள் மற்றும் இராணுவ ஆயுத உற்பத்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் தலைநகரான டெஹ்ரானுக்கு அருகிலுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேலை நோக்கி ஈரானும் 10 ballistic ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. மேலும் ஈரானிய தலைநகர் டெஹ்ரானுக்கு அருகிலுள்ள கோஜிர் ஏவுகணை உற்பத்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்குவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெஹ்ரானின் ஒரு குறிப்பிட்ட பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் பாதுகாப்பு படை குடியிருப்பாளர்களை எச்சரித்தது. அதன் பிறகு அப்பகுதியில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து ஈரானிய தலைநகரின் சில பகுதிகளில் வெடி சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. டெஹ்ரானின் 18வது மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு IDF சற்று முன்னர், உடனடியாக வெளியேறமாறு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இதன்படி, சில மணிநேரங்களில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும் அங்கிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில், ‘அனைத்து குடிமக்கள் மற்றும் அந்தப் பகுதியிலுள்ள பணியாளர்கள், உங்கள் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறவும்,’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News