Thursday, May 29, 2025

ஈயத்தை இனி தங்கமாக மாற்றலாம்! அப்ப இனி தங்கத்தின் நிலைமை? ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஈயத்தை தங்கமாக மாற்றும் முயற்சி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் The Large Hadron Collider என்ற திட்டத்தில் பணி செய்யும் இயற்பியலாளர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது உலகத்தை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.

தங்கத்தின் சில பண்புகளை போலவே ஈயத்திலும் இருப்பதால், இந்த ஆராய்ச்சிக்கு ஈயத்தை ஆய்வாளர்கள் தேர்வு செய்தனர். இந்த ஆராய்ச்சிக்காக Cern-னில் (செர்னில்) செயல்பட்டு வரும் மிகப்பெரிய துகள் முடுக்கியை ஆய்வாளர்கள் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துகள் முடிக்கியில் ஈயத்தின் அணுக்கள், ஒன்றோடொன்று அதிக வேகத்தில் மோத வைக்கப்பட்டதில் ஒரு சில அயனிகள் மோதின. ஆனாலும் ஒரு சில மோதவில்லை. இந்த துகள்களின் வேகம் ஏறத்தாழ ஒளியின் வேகத்திற்கு இணையாக இருந்தது என்பது ஆச்சரியமே. இந்த ஆய்வின் போது, சில ஈய அணுக்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி வந்தன. இந்த துகள்கள் எலக்ரிக் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் என்பதால், அவை ஒன்றுக்கொன்று நெருங்கி வந்த போது, மின்காந்த மின்னூட்டங்களைக் கொண்ட ஒரு புலம் உண்டானது.

இதன் காரணமாக ஈய அணுவில் இருந்த 82 ப்ரோட்டோன்களில் மூன்று ப்ரோட்டோன்கள் வெளியேறி 79 ப்ரோட்டோன்களைக் கொண்ட தங்க அணுக்கள் உருவாகின. ஆனால் இது மைக்ரோ நொடிகளுக்கு மட்டுமே நீடித்தது. இந்த ஆய்வில் அயனிகள் வெடித்துச் சிதறியதாலும் வேதியல் மாற்றத்தாலும் வெற்றுக்கண்களால் இதை காண கூடாதிருந்தது. இவை அனைத்தும் சில நொடிகளில் நடந்து முடிந்தது என்றாலும் அதிநவீன கருவிகள் மூலம் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு ஒரு சில நாட்களுக்கு முன் செர்ன் தன்னுடைய ஆய்வு முடிவை வெளியிட்டது. செர்ன் ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுவதோடு இந்த ஆராய்ச்சி வரும் நாட்களில் அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்ற எதிர்ப்பார்ப்பும் உலகளவில் அதிகரித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news