சென்னை பாரிமுனையில் இருந்து கிளாம்பாக்கம் வரை வந்த மாநகர பேருந்தில் பயணித்த முதலாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி ப்ரியா என்கிற பெண் தாம்பரம் வரை பயணச்சீட்டு எடுத்துவிட்டு தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவில்லை. அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் போது நடத்துனர் அந்த பெண்ணிடம் நீங்கள் இறங்க வேண்டிய இடத்தை தாண்டி வந்துவிட்டதால் தாம்பரத்தில் இருந்து பயணித்ததற்காக 15ரூபாய்க்கு டிக்கெட் எடுக்கச்சொல்லி அந்த பேருந்தின் நடத்துனர் மணி என்பவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த பெண் டிக்கெட் எடுக்க முடியாது. தாம்பரத்தில் இறக்கிவிடாமல் இதுவரை அழைத்து வந்தது உன்னுடைய தவறு என நடத்துனரிடம் அந்த பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவரிடையே கடும் வாக்குவாதம் முற்றிய நிலையில் நடத்துனரை அந்த பெண் ஒருமையில் அசிங்கமாக பேசவும், பதிலுக்கு நடத்துனரும் அந்த பெண்ணை என ஒருமையில் பேசியதாக சொல்லப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அந்த பெண் நான் யார் தெரியுமாடா வழக்கறிஞர், என சொல்லிக்கொண்டு தனது செருப்பை கழட்டி சற்றும் எதிர்பாராத நேரத்தில் நடத்துனர் மணியை கண்ணத்தில் பளார் பளாரென இரண்டு அடி அடித்ததாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து நடத்துனர் மணி மற்றும் சட்டக்கல்லூரி மாணவி ப்ரியா இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். இருதரப்பினர் புகாரையும் ஏற்றுக்கொண்ட கிளாம்பாக்கம் போலீசார், இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, இந்த சம்பத்தை கண்டித்து அமைத்து ஓட்டுநர்களும், நடத்துனரும் பேருந்தை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி 30 நிமிடத்திற்கு பின்னர் கூட்டத்தை கலைத்தனர். இதனால் பயணிக்கள் அவதிக்குள்ளாகினர் .
இதற்கிடையே, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பேருந்துக்காக காத்திருந்த பெண்களிடம் இளைஞர் ஒருவர் ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்த பெண்கள் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தார். காவல்துறைக்கு புகார் அளித்தும் அங்கிருந்த நபர் மீண்டும் மீண்டும் பெண்களிடம் ஆபாச செய்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்த பெண்கள் அவரை வீடியோ எடுத்த பின் அவர் அங்கிருந்து புறப்பட்டார். வேளச்சேரியில் ஒரு நபர் பெண்களிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்கள் பரவி வருகிறது.
