கடந்த 2007ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து சாதனை படைத்தார்.
இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஓவரில் 6 பந்துகளையும் யுவராஜ் சிங் சிக்சர்கள் விளாசிய நிலையில், இந்த வரலாற்று சாதனைக்கு நான் தான் காரணம் என ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.
போட்டிக்கு முன்பாக, யாராவது ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்தாலோ அல்லது 6 விக்கெட் எடுத்தாலே சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கப்படும் என அனைவரிடமும் சொன்னதாகவும், இதன்படி சிக்சர் விளாசிய யுவராஜ் சிங்கிற்கு நான் சொகுசு காரை பரிசளித்ததாகவும் லலித் மோடி கூறியுள்ளார்.