Tuesday, April 22, 2025

போலீசுக்கே இந்த நிலைமையா? : பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற வாலிபர் கைது

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் நடைமேடையில் இருந்து இறங்கி ரயில் நிலையத்தின் வெளியே நடந்து செல்லும் போது பெண் காவலரை கீழே தள்ளி பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் காவலர் ஒருவர் பணியை முடித்துவிட்டு பழவந்தாங்கலில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இருட்டான பகுதியில் மறைந்திருந்த வாலிபர் அவரை கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை முயற்சி செய்தது அம்பலமாகி இருக்கிறது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Latest news