Monday, September 1, 2025

கும்பமேளா உயிரிழப்பு : பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் – காங்கிரஸ்

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில், சுமார் 31 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் உ.பி. அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடியும், யோகி ஆதித்யநாத்தும் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆதித்யநாத் படங்களை மட்டும்தான் பார்க்க முடிகிறது. கும்பமேளாவில் ஏற்பட்ட துயரத்திற்கு அவர்கள் இருவரும்தான் பொறுப்பேற்று பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என மராட்டிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News