ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு!

ஈரானின் புதிய உச்சத் தலைவராக, மறைந்த ஆயத்துல்லா அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவப் படைகள் இணைந்து ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தின. அந்தத் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுருவான ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதன் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News