கடந்த 2018ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2022ம் ஆண்டு வெளியானது. இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் சாச்சா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஹரிஷ் ராய். அவருக்கு இப்போது தைராய்டு புற்றுநோய் நான்காவது கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து நடிகர் துருவா சர்ஜா அவரது சிகிச்சைக்கு ரூ. 11 லட்சம் நன்கொடை அளித்தார்.
நடிகர் ஹரிஷ் ராய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கவலையடைய வைத்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் ஷெட்டி கதாபாத்திரத்தில் நடித்த தினேஷ் மங்களூர் உயிரிழந்தார்.