Tuesday, January 27, 2026

நடிகர் துல்கர் சல்மானுக்கு அடுத்த சிக்கல் : நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

நடிகர் துல்கர் சல்மான் கேரளாவை சேர்ந்த ஒரு பிரியாணி அரசி நிறுவனத்திற்கு விளம்பர தூதராக உள்ளார். இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு கேட்டரிங் நிறுவனம் சார்பில் நுகர்வோர் ஆணையத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது.

அந்த மனுவில் “கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக பிரசித்தி பெற்ற ஒரு நிறுவனத்தின் பிரியாணி அரிசியை வாங்கினோம். அதில் சமைத்த பிரியாணியை சாப்பிட்ட பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டது. இதை தொடர்ந்து அந்த அரிசி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர தூதரான நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து வருகிற டிசம்பர் 3ம் தேதி அரிசி நிறுவனத்தின் உரிமையாளர், நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related News

Latest News