Thursday, December 26, 2024

கிட்ட போனா இழுத்து விழுங்கும் விநோத புதைகுழி! வைரலாகும் வீடியோ

தன் பாதையில் வருபவற்றை எல்லாம் விழுங்கும் புதைகுழி ஒன்றின் வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள கென்யா பள்ளத்தாக்கில் இந்த புதைகுழி அமைந்துள்ளது.

குறிப்பிட்ட வீடியோவில், அருகில் இருக்கும் நீரை முதலில் உள்ளிழுக்கும் புதைகுழி, மெல்ல சுற்றி உள்ள புல் தரை துண்டுகளையும் சேர்த்து உள்ளிழுக்கும் காட்சிகள் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெக்டானிக் மண்டலமாக அடையாளம் காணப்பட்டுள்ள அந்தப் பகுதியில் பூமிக்கு அடியில் இருக்கும் அதிகமான வெற்றிடமே, இது போன்ற நிகழ்வுகளுக்கான அறிவியல் காரணமாக பார்க்கப்படுகிறது.

புதைகுழியை பற்றிய வீடியோ முன்னதாக 2020ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், அண்மையில் ட்விட்டர் பயனர் ஒருவர் மீண்டும் பகிர்ந்த இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest news