Thursday, February 19, 2026

நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த காவ்யா மாதவன், தமிழ் ரசிகர்களிடையிலும் தனக்கென ஒரு இடத்தை பெற்றவர். “காசி”, “என் மன வானில்”, “சாது மிரண்டா” போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், காவ்யா மாதவனின் தந்தை பி. மாதவன், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.

இவரது உடல் சென்னையிலிருந்து இறுதிச் சடங்குகளுக்காக அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related News

Latest News