அடிக்கும் வெயிலுக்கு ஈடாக, IPL தொடரிலும் சர்ச்சைகள் வரிசைகட்ட ஆரம்பித்து இருக்கின்றன. யாரும் எதிர்பாராத விதமாக இதுவரை கோப்பை வெல்லாத பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் அணிகள் டேபிள் டாப்பர்களாக இருக்கின்றன.
ஆனால் பெரிதாக கெத்து காட்டி வந்த மும்பை, சென்னை, கொல்கத்தா அணிகள் அதலபாதாளத்தில் சரிந்து கிடக்கின்றன. நடப்பு சாம்பியன் KKRம் இந்த லிஸ்டில் இருப்பது தான் கொடுமை. இந்தநிலையில் சொந்த மைதானங்களை கணிக்க முடியவில்லை. மைதான பராமரிப்பாளர்கள் தங்களுக்கு ஏற்றவாறு Pitchஐ, வடிவமைத்து கொடுக்க மறுக்கின்றனர் என, சர்ச்சை வெடித்துள்ளது.
குறிப்பாக சொந்த மைதானத்தில் தாங்கள் தோல்வி அடைந்ததற்கு, Pitch வடிவமைப்பாளர் தான் காரணம் என கொல்கத்தா, லக்னோ அணிகள் சண்டை போட்டு வருகின்றன. சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் இன்னும் ஒருபடி மேலே சென்று,”சேப்பாக்கம் மைதானத்தை தங்களால் கணிக்க முடியவில்லை. இதுவே தோல்விக்குக் காரணம் என்று பேசியிருக்கிறார்.
BCCI விதிமுறையின்படி மைதானங்களின் மீது IPL அணிகளுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. இதனால் KKR, LSG அணிகள் தங்களது Home Groundஐ மாற்றலாமா?, என்று ரூம் போட்டு யோசித்து வருகின்றனவாம்.
இதைப்பார்த்த ரசிகர்கள், ”ஆட தெரியாதவன் தெரு கோணல்னு’ சொன்ன மாதிரி இருக்கு உங்களோட காரணம்,” என்று மேற்கண்ட அணிகளை, சமூக வலைதளங்களில் வசைபாடி வருகின்றனர்.