கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் இழப்பீடு வழங்கியது. அதன்படி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.
