Monday, December 22, 2025

கரூர் சம்பவம்; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோ’வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி செந்தில்குமார் தவெக தலைவர் விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லையா? என கடுமை​யாக விமர்​சித்​தும், இந்த சம்​பவம் குறித்து விசா​ரணை நடத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு விசா​ரணைக் குழு அமைத்​தும் உத்​தர​விட்டிருந்​தார்.

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா, கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம் என 5 பேர் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

இது குறித்த அனைத்து மனுக்கள் நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக தரப்பில் எங்கள் தரப்பின் விளக்கமே கேட்காமல் சென்னை உயர்நீதிமன்றம் கருத்துகளை முன்வைத்துள்ளதாக சொல்லப்பட்டது. மேலும், சம்பவம் நடைபெற்றதும் விஜய் தப்பித்து ஓடியதாக அரசு வழக்கறிஞர் கூறியது தவறானது. போலீஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல் அடிப்படையில் தான் விஜய் அங்கிருந்து வெளியேறினார். நாங்கள் வளர்ந்து வரும் கட்சி என்பதால், நியாயமான விசாரணை வேண்டும். SIT விசாரணை வேண்டாம். முன்னாள் நீதிபதி கண்காணிப்பில் உச்ச நீதிமன்றமே ஒரு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு பதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தது ஏன்? ஒரே வழக்கில் எப்படி இரு உத்தரவுகள்? கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு என கருத்து தெரிவித்தனர். கரூர் பிரச்சாரம் தொடர்பான நெறிமுறைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் SIT விசாரணைக்கு எப்படி உத்தரவிடப்பட்டது என அடுக்கடுக்கான கேள்விகளை சரமாரியாக கேட்கப்பட்டது.

இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. மேலும், குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்த காரணமும் இல்லை. அஸ்ரா கார்க், CBI-லும் பணியாற்றியுள்ளார் என்று தெரிவித்தனர். இதனை குறித்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த நிலையில் கரூர் விவகாரம் தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, கரூர் விவகாரம் தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் CBI விசாரணை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தொகி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரு IAS அதிகாரிகள் இடம் பெறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

Related News

Latest News