தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 27 தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, வரும் 12ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
