Tuesday, January 13, 2026

அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள ‘கருப்பு பல்சர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். இவர் தற்போது முரளி கிருஷ் இயக்கத்தில் ‘கருப்பு பல்சர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், ‘கருப்பு பல்சர்’ படம் வருகிற 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related News

Latest News