தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமைந்தது. இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்பி தம்பிதுரை, தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடந்ததில்லை, இனியும் நடக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். 2026 எடப்பாடி பழனிசாமி தனியாக தான் ஆட்சி நடத்துவார், கூட்டணி ஆட்சி கிடையாது எனவும் எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது : இந்த கூட்டணி, விரும்பி வந்தது போல் தெரியவில்லை. துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு போய் கட்டாயத் திருமணம் செய்தது போல உள்ளது. அதிமுக தொண்டர்கள் இக்கூட்டணியை விரும்பவில்லை என தெரிவித்தார்.