Monday, January 26, 2026

98-வது ஆஸ்கர் விருது விழாவில் காந்தாரா சாப்டர் 1

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா, கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி, இந்தியா முழுவதும் பெரும் கவனத்தை பெற்றது . இதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ‘காந்தாரா சாப்டர் 1′ வெளியானது. இந்த படம் உலகளவில் சுமார் 855 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து பெரிய சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள 98-வது ஆஸ்கர் விருது விழாவின் சிறந்த திரைப்படப் பிரிவில் போட்டியிடத் தகுதி பெற்ற உலகம் முழுவதிலுள்ள 201 திரைப்படங்களின் பட்டியலில் ‘காந்தாரா: சாப்டர் 1’ இடம் பெற்றுள்ளது.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ திரைப்படமும் அப்போது ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆனால் அது இறுதி பட்டியலில் சேரவில்லை. 98-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி பட்டியல் 2026 ஜனவரி 22 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அந்த இறுதி பட்டியலில் ‘காந்தாரா: சாப்டர் 1’ இடம் பெறுமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related News

Latest News