Friday, March 14, 2025

நிதி தரமுடியாதா..விளைவுகள் மோசமா இருக்கும் – கனிமொழி எச்சரிக்கை

“மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று கூறினால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். எல்லா வரியையும் ஜிஎஸ்டி வழியாக வசூல் செய்து கொண்டு தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்பதா? எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.

தமிழ்நாட்டு மக்களுடைய போர்குணம் எந்த அளவிலும் குறைந்துவிடவில்லை என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Latest news