Tuesday, July 15, 2025

காமராஜர் பிறந்தநாள் : பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி மரியாதை

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் காமராஜரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரது திருவுருவப்படத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் காமராஜருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலர் காமராஜரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news