சென்னை பெரம்பூரில் நேற்று (ஜூலை 15) திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டு பேசினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது : காமராஜருக்கு ‘ஏசி’ இல்லையெனில் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி அமைக்க கருணாநிதி ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறினார்.
காமராஜர் சாகும்போது, கருணாநிதியின் கையை பிடித்து, ‘நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்’ என கூறியதாக திமுக எம்.பி., திருச்சி சிவா பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில், “திருச்சி சிவா ஆதாரமில்லாமல் பேசுகிறார். காமராஜர் பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதியில்லை’’ என்றும் குறிப்பிட்டார்.