மநீம தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது; “திரைத்துறையில் நாட்டின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் மோகன்லாலுக்கு எனது வாழ்த்துகள்.
விஜய்யைப் பார்க்க வரும் கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது. விஜய்க்கு மட்டும் அல்ல நான் உட்பட இந்தியாவின் எந்தத் தலைவருக்கும் கூடும் கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது. நல்ல பாதையில் செல்ல வேண்டும், தைரியமாக முன்னேறுங்கள், மக்களுக்காகச் செய்யுங்கள் என்பதே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எனது ஆலோசனை என தெரிவித்தார்.
