நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தார்.
நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக காளியம்மாள் பதவி வகித்தார். அதனை தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி ஓராண்டிற்கும் மேல் எந்த கட்சியில் இணையாமல் இருந்தார் காளியம்மாள்.
முன்னதாக, காளியம்மாள் த.வெ.க.வில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் அ.தி.மு.க.வில் இணைந்து கொண்டார்
