Friday, March 14, 2025

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார் காளியம்மாள்

நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான காளியம்மாள் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் நிலவும் கருத்து முரண்பாடு காரணமாக விலகியே இருந்தார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகி கொள்ளட்டும் என பேசினார்.

இந்நிலையில் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அக்கட்சியில் இருந்து பலரும் விலகி வரும் நிலையில் தற்போது காளியம்மாள் விலகியுள்ளார்.

Latest news