நீங்கள் கிராமத்தில் இருந்து நல்ல வருமானம் சம்பாதிக்க விரும்பினால், வெண்ணிலா சாகுபடி ஒரு நல்ல வாய்ப்பு. புதிய முயற்சி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கும் இது ஏற்றது. வெண்ணிலாவுக்கு அதிக பயன்பாடு, அதிக விலை, மருத்துவ குணங்கள் இருப்பதால் அதன் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.உணவுத் துறையில் வெண்ணிலா மிகவும் பயன்படுத்தப்படுகிறது. ஐஸ்கிரீம், சாக்லேட், பேக்கரி பொருட்கள், இனிப்புகள் போன்ற பல உணவுகளில் இது சேர்க்கப்படுகிறது.
இந்திய மசாலா வாரியத்தின்படி, உலகில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீமில் சுமார் 40%க்கு வெண்ணிலா சுவை உள்ளது. அதேபோல் வாசனைத் திரவியங்கள், சோப்புகள், உடல் லோஷன்கள், ஷாம்பூக்களிலும் வெண்ணிலா பயன்படுத்தப்படுகிறது. வெண்ணிலாவில் உள்ள ‘வெண்ணிலின்’ என்ற கூறு கெட்ட கொழுப்பைக் குறைக்க, புற்றுநோயை எதிர்க்க, செரிமானத்தை மேம்படுத்த, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாக மருத்துவ ஆய்வு சார்ந்த கட்டுரைகள் கூறி இருக்கின்றன .
வெண்ணிலா சாகுபடிக்கு வெப்பமான, ஈரமான காலநிலை மிகவும் உகந்தது. களிமண் மண்ணில் இது நன்றாக வளரும். மண்ணின் pH அளவு 5 முதல் 7.5 வரை இருப்பது சிறந்தது. சரியான தாங்கு மரங்கள் அல்லது ஆதரவு கொடுத்தால் அதன் கொடிகள் வேகமாக வளர்கின்றன. வெண்ணிலா செடி முழு வளர்ச்சி பெற 9 முதல் 10 மாதங்கள் ஆகும். நேரடி கடும் வெயிலிலிருந்து பாதுகாக்க, நிழல் இருக்கும் இடத்தில் இதைப் பயிரிட வேண்டும். சீரான நீர்ப்பாசனம் மற்றும் தேவையான அளவு உரம் போடுவது அவசியமாகும்
சந்தையில் வெண்ணிலா விதைகளின் விலை 1 கிலோக்கு சுமார் ரூ. 40,000 முதல் ரூ. 50,000 வரை இருக்கும். 1 ஏக்கரில் சுமார் 200–300 கிலோ வரை வெண்ணிலா பெறலாம். 2–3 ஏக்கரில் வெண்ணிலா பயிரிட்டால், ஒரு விவசாயி ஆண்டுக்கு மிக அதிக வருமானம் சம்பாதிக்க முடியும். எடுத்துக்காட்டாக, 200 கிலோ விளைபொருளை, 1 கிலோக்கு ரூ. 40,000 என்ற விலையில் விற்றாலும், ஒரு விளைச்சலுக்கு ரூ. 8,000,000 வரை வருமானம் கிடைக்கலாம்.
