Saturday, December 27, 2025

இந்த 3 Points மட்டும் ஃபாலோ பண்ணா போதும்! 10 மற்றும் 12ம் வகுப்பில் Marks-ஐ அள்ளலாம்!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் தேர்வுக்கான இறுதி தயாரிப்பில்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கல்வித்துறை வல்லுநர்கள் கூறுவதாவது, ‘மாணவர்கள் நேரத்தை சரியாகப் பிரித்து திட்டமிட்டு படிப்பது வெற்றிக்கான முதல் படி’ என்பதே.

நிபுணர்கள் பரிந்துரைப்படி, மாணவர்கள் தினசரி குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் படிப்பதற்கான பழக்கத்தை உருவாக்க வேண்டும். முக்கிய பாடப்பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, பாடத்தை மீண்டும் நினைவுபடுத்தும் பழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம். பழைய ஆண்டுத் தேர்வுக் கேள்வித்தாள்களைப் பார்த்து பயிற்சி மேற்கொள்வது, நேரத்தை சரியாக திட்டமிடும் திறனை வளர்க்க உதவும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், ஒவ்வொரு மணி நேரத்திற்குப் பிறகு சிறிய இடைவெளி எடுத்து மூளைச் சோர்வைத் தவிர்க்கலாம். மாணவர்கள் ஆரோக்கியமான உணவும், போதுமான உறக்கமும் பெறுவது மிக முக்கியம். மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க பிராத்தனை, நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம் என நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மேலும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்குவது தேர்வில் சிறந்த பெறுபேறுகளுக்கு வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது. தேர்வில் மதிப்பெண் மட்டுமல்ல, மனநிலையும் முக்கியமானது என்பதையும் கல்வித்துறை நினைவூட்டியுள்ளது.

மொத்தத்தில், ஒழுங்கான திட்டம், மன அமைதி மற்றும் தொடர்ந்து revise செய்வது போன்றவை பலனளிக்கும். இதுவே 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான மூன்று முக்கியமான Points என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

Related News

Latest News