நீங்கள் வேலைவாய்ப்பை தேடுகிறீர்களா? அல்லது ஒரு நல்ல தொழிற்பயிற்சி கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்கான சிறந்த வாய்ப்பு!
சென்னை கிண்டியில் செயல்படும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், இப்போது பல்வேறு தொழில்நுட்பப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கட்டணமில்லாமல் பயிற்சி, மாதந்தோறும் உதவித்தொகை, மேலும் வேலைவாய்ப்பு உறுதி என அனைத்தும் ஒரே இடத்தில்!
இங்கு ஆண்கள் 40 வயது வரை சேரலாம். ஆனால் பெண்களுக்கு எந்தவிதமான வயது வரம்பும் இல்லை. 8ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். மாணவர்களாக இருந்தாலும், தொழில் கற்றுக் கொள்ள விரும்பும் பெரியவர்கள் இருந்தாலும், அனைவருக்கும் இது திறந்த வாய்ப்பு.
பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு ரூ.750 உதவித்தொகையாகவும், ஆண்களுக்கு “தமிழ்புதல்வன் திட்டம்” மூலம் மற்றும் பெண்களுக்கு “புதுமைப்பெண் திட்டம்” மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதற்காக நீங்கள் ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை!
மேலும், இலவச சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி என அனைத்தும் அரசு தருகிறது. On Job Training வாயிலாக நேரடியாக தொழிற்சாலைகளில் பயிற்சி பெற முடியும். இந்த பயிற்சி முடித்தவுடன் உங்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி!
இது போல ஒரு அரிய வாய்ப்பை நீங்கள் தவறவிடக்கூடாது. இதற்கான இணையதளமான www.skilltraining.tn.gov.in மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இல்லையெனில் நேரடியாக கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள இலவச உதவிமையத்திற்குச் சென்றாலும் போதும்.
விண்ணப்பங்கள் மே 19ஆம் தேதி தொடங்கியுள்ளன. கடைசி தேதி ஜூன் 13. ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-22501350 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.