“விசில் ஊதினால் போதும், குழந்தைகளுக்கு சளி நின்றுவிடும்” : செங்கோட்டையன் பேச்சால் தவெக அதிர்ச்சி

தமிழக சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றன. பிரச்சாரம் முடிய இன்னும் முழுமையாக 2 வாரங்களே உள்ள நிலையில், பிரதான கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சில மாதங்களுக்கு முன்பு விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்த நிலையில், அக்கட்சி சார்பில் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செங்கோட்டையன் செய்து வருகிறார். “நம்முடைய விசில் சின்னத்திற்கு ஒரு பெருமை இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, விசில் சின்னம் தான் இந்தியாவை நாளை ஆளப் போகிறது. சின்னக் குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் விசில் ஊதினால் போதும். சளி நின்று போய்விடும். மூச்சுப் பயிற்சி வேண்டும் என்பார்கள். முதியவர்கள் விசில் அடித்தால் இதயம் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.” எனப் பேசியுள்ளார்

Related News

Latest News