யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஜெய்தீப் கர்னிக் என்பவர் நிகழ்ச்சியின் நெறியாளராக இருந்தார். நிகழ்ச்சியின் போது, ஜெய்தீப் கர்னிக் தன்னுடன் மல்யுத்தம் செய்ய வருமாறு பாபா ராம்தேவுக்கு சவால் விடுத்தார். ஜெய்தீப் மல்யுத்தப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த சவாலை அவர் ஏற்றுக் கொண்டார்.
மல்யுத்தப் போட்டி தொடங்கிய ஆரம்பத்தில் பாபா ராம்தேவ் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில், ஜெய்தீப் கர்னிக் பாபா ராம்தேவை தரையில் தள்ளி போட்டியில் வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
